கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகளில் 285 வர்த்தக நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன!

Sunday, 18 July 2021 - 20:42

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+285+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%21
கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகளில் தற்போது பலதரப்பட்ட தொழில்துறைகளை சேர்ந்த 285 வர்த்தக நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.

உரிய முறையில் பரிவர்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நாட்டின் நிதி நிலையினை ஸ்திரத்தன்மையில் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று என்பன காரணமாக பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த காரணிகள் காரணமாக கடந்த டிசம்பர் 2019 முதல் சுற்றுலா பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாற்று நடவடிக்கைகள் காரணமாக சர்வதேச சந்தையினை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், தற்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கான மாற்று தடுப்பூசி துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதனால் நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பும் என சுற்றுலா தொழில்சார் தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.