இந்தோனேசியாவில் இம்மாதத்தில் 114 வைத்தியர்கள் கொரோனாவால் மரணம்

Sunday, 18 July 2021 - 21:24

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+114+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இந்தோனேசியாவில் ஜூலை மாத முற்பகுதியில் அதிகளவான வைத்தியர்கள் கொவிட்-19 நோயால் மரணித்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களுக்குள், 114 வைத்தியர்கள் மரணித்ததாக இந்தோனேசிய வைத்தியர்கள் சங்கத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 பரவல் ஆரம்பித்த காலம் முதல் இதுவரையில் 545 வைத்தியர்கள் இந்தோனேசியாவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா திரிபு  காரணமாக கொரோனா பரவல் நிலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது