கென்யாவில் பெட்ரோல் தாங்கி ஊர்தி வெடித்ததில் 13 பேர் பலி!

Monday, 19 July 2021 - 8:22

%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
கென்யாவில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தியொன்று வெடித்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் மேற்கு பகுதியில், கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி கவிழ்ந்து, அதிலிருந்த பெட்ரோல் வெளியேறியுள்ளது.

இதனைப் அவதானித்த அப்பகுதி வாழ் மக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக அங்கு திரண்டுள்ளனர்.

இதன்போது பெட்ரோல் தாங்கி திடீரென வெடித்ததில், பெற்றோல் சேகரிக்கச் சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருளை ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி, எதிரே வந்த பார ஊர்தியுடன் ஏற்படவிருந்த விபத்தை தவிர்ப்பதற்காக தாங்கி ஊர்தியை திசைத் திருப்ப முயற்சித்தப்போதே இந்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
No description available.