பாகிஸ்தானில் கோர விபத்து: 30 பேர் பலி, 74 பேர் காயம்

Monday, 19 July 2021 - 22:34

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%2C+74+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 30 பேர் பலியானதுடன் மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் லாகூருக்கு கிழக்கேயுள்ள தெரகாசி கான் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்றும், கொள்கலன் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதனால், மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமாக இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன ஓட்டுநர்கள் வீதி சட்டதிட்டங்களை பேணாமை மற்றும் வீதிகளின் தன்மை காரணமாகவே விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தொடருந்து விபத்தொன்றின் போது 56 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், ஏராளமானவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.