இந்தியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

Tuesday, 20 July 2021 - 13:17

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் மாத்திரம் இதுவரை கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,108ஆக உயர்வடைந்துள்ளது.

அங்கு மஹாராஸ்ட்டிரா மாநிலத்திலேயே அதிகளவான கொவிட் 19 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

குறித்த மாநிலத்தில் மாத்திரம் 127,031 கொவிட் 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 பாதிப்புக்களில் பாரியளவான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தொற்று நோய் காரணமாக இறந்தவர்களின் விபரங்கள் முறையாக பதியப்படாமை காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.