இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனையை தளர்த்திய அமெரிக்கா!

Tuesday, 20 July 2021 - 20:37

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%21
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான தமது பயண ஆலோசனையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பயண ஆலோசனையில் 4 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டிருந்த குறித்த நாடுகள், தற்போது 3 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, தமது பிரஜைகள் பயணிக்க கூடாத நாடுகளை, நான்காம் அடுக்கிலும், பயணங்களை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நாடுகளை மூன்றாம் அடுக்கிலும் வைத்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால், நேற்று வெளியிடப்பட்ட பயண ஆலோசனையில், இந்தியாவும், பாகிஸ்தானும், 4ஆம் அடுக்கில் இருந்து, 3ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் நிலைமை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.