பாடசாலையினுள் சக மாணவனை கோடரியால் தாக்கிக் கொலை செய்த 16 வயது மாணவன்!

Wednesday, 21 July 2021 - 18:19

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%21
சிங்கப்பூரிலுள்ள பாடசாலையொன்றில், மாணவரொருவர் சக மாணவனை கொடூரமான வகையில் கோடாரியால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக அறியப்படுவது ரிவர்வெலி உயர் பாடசாலையின் கழிவறையொன்றினுள்ளே கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாணவர்கள் சிலர் பாடசாலை கழிப்பறைக்கு சென்றபோது, அவ்விடத்தில் சக மாணவர் ஒருவன் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்று, அது தொடர்பில் ஆசிரியர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, காவல்துறைக்கும் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மாணவனின் உடலுக்கு அருகே காணப்பட்ட இரத்தக்கறைப் படிந்த கோடாரியையும் கைப்பற்றியுள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவன் 13 வயதான ஒருவர் என்றும்,  அதே பாடசாலையைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவரே அவரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தேகநபரான 16 வயது மாணவனை காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறைந்தளவான குற்றங்கள் இடம்பெறும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை அந்நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.