4ஆவது முறையாகவும் திருமணம் செய்த நடிகை வனிதா?

Wednesday, 21 July 2021 - 21:31

4%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%3F
பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா.

ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3ஆவது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் சில தினங்களிலேயே அவரையும் குடிகாரர் என்று விவகாரத்து செய்து விட்டார் நடிகை வனிதா.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வனிதா 4ஆவது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.