இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு!

Thursday, 22 July 2021 - 8:01

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+17+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருந்த சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயர்ஸ்டோவ் ஆகியோர் மீள அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதன்படி, ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து குழாமில், ஜேம்ஸ் எண்டர்ஸன், ஜொனி பெயார்ஸ்டோவ், டொம் பெஸ் , ஸ்டுவார்ட் ப்ரொட், ரொரி பேர்ன்ஸ் , ஜொஸ் பட்லர், ஷாக் கிரவ்லே, சாம் கரன், ஹஷிப் ஹமீத், டேன் லோரன்ஸ், ஜெக் லீச், ஒல்லி போப், ஒல்லி ரொபின்ஸன், டொம் சிப்லி, பென் ஸ்டொக்ஸ் மற்றும் மார்க் வூட்  ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஆக்ஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.