300 மில்லியன் ரூபா பெறுமதியான கொவிட் பரிசோதனை கருவிகள் அமெரிக்காவினால் நன்கொடை!

Thursday, 22 July 2021 - 10:42

300+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%21
கொவிட்-19 நோயை மிக விரைவாக கண்டறியும் பரிசோதனை கருவிகளை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் முகவரகம் ஊடாக இந்த 5 இலட்சம் பரிசோதனை கருவிகள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனை கருவிகளின் பெறுமதி 300 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களின் ஒரு கட்டமாக இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.