மொடர்னா தடுப்பூசி தொடர்பான போலிப் பிரசாரம் குறித்து காவல்துறை விசாரணை

Thursday, 22 July 2021 - 10:54

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
மொடர்னா தடுப்பூசி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக கண்டி பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளர்.

அந்த தடுப்பூசியானது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்துவதாக தெரிவித்தே சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.