ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதியின் ஒரு பகுதி மூடப்பட்டது!

Thursday, 22 July 2021 - 12:39

%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21
வேதன விவகாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து 30 அதிபர், ஆசிரியர் சங்கங்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். 

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து  ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால்  ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவுள்ள கொழும்பு - காலி வீதியில் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அதிபர் சங்க பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதி செயலக அதிகாரிகளிடம் மனுவொன்றையும் கையளித்தனர்.