தரமுயர்ந்த உள்ளூர் மசாலாப் பொருட்கள் அடங்கிய பொதி சலுகை விலையில்!

Thursday, 22 July 2021 - 15:54

%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
தரமுயர்ந்த உள்ளூர் மசாலாப் பொருட்கள் அடங்கிய 1,350 ரூபா பெறுமதி கொண்ட மசாலாப் பொருட்கள் பொதியொன்று 800 ரூபா என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தூள், மிளகு, கறி மசாலாத்தூள், கடுகு, வெந்தயம் போன்ற முக்கிய பொருட்கள் அடங்கிய சலுகை பொதிகளை எதிர்வரும் வாரம் முதல் சதொச விற்பனையகங்களில் கொள்வனவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் வரை நாட்டின் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் மூலமான வருமானம் 27, 977 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் சிறு ஏற்றுமதி பயிர்கள் மூலம் 43, 112 மில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.