9 வயதான மகளின் உடலை ஸ்பரிசித்த நபரை கொலைசெய்த தந்தை!

Friday, 23 July 2021 - 11:53

9+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21

மத்துகம, பிரதேசத்தில், தனது நண்பனை தாக்கிக் கொலைசெய்த சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வீட்டுக்குவந்த நண்பர், 9 வயதான தனது உடலை ஸ்பரிசம் செய்துள்ளதாகவும், இதனை அவதானித்த தந்தை கோபத்தில் தனது நண்பரை தாக்கிக் கொலைசெய்துள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த நபர் மத்துகம நாபிட்டிவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையை மேற்கொண்டதாகக் கூறப்படும் 33 வயதான சந்தேகநபர் நேற்று கைதுசெய்யப்பட்டு மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உயிரிழந்த நபரின் சரீரம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக மத்துகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.