அழகியற்கலை செயன்முறை பரீட்சையில் இருந்து விலக ஆசிரியர், அதிபர் சங்கங்கள் தீர்மானம்!

Friday, 23 July 2021 - 21:06

+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அழகியற்கலை செயன்முறை பரீட்சைகளில் இருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கல்வியமைச்சுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர், அதிபர்களின் வேதனப் பிரச்சினையை தீர்க்கக் கோரியும், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர் தொழிற் சங்கங்களின் கூட்டிணைவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

ஆசிரியர், அதிபர்களின் நியாயமான கோரிக்கைளை தீர்க்க முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டக்கார்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர்.