8 வார இடைவெளியில் பைஸர் இரண்டாம் தடுப்பூசி பெற்றால் நோயெதிர்ப்பு வீரியம் அதிகரிக்கும்

Friday, 23 July 2021 - 22:22

8+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
பைஸர் பயோஎன்டெக் முதலாம் மற்றும் இரண்டாம் கொவிட் தடுப்பூசி செலுத்துகைக்கு இடையிலான கால இடைவெளியானது 8 வாரங்களாக இருப்பின் அந்த தடுப்பூசிக்கு நோய்த்தொற்றினை எதிர்க்கும் வீரியம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, குறித்த தடுப்பூசியின் முதலாம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட நபரொருவருக்கு, 8 வாரங்களுக்கு பின்னர் இரண்டாம் தடுப்பூசி வழங்கப்பட்டால், டெல்டா வைரஸ் திரிபிற்கான எதிர்ப்புடல் உருவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆண்டு பிற்பகுதியிலும், 2021ஆம் ஆண்டு பிற்பகுதியிலும் வெவ்வேறு காலகட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 503 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.