சீரற்ற காலநிலையால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 110 பேர் பலி!

Saturday, 24 July 2021 - 8:33

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+110+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இந்திய மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழைக்காரணமாக 110 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்காக உலங்கு வானூர்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மும்பாயில் இருந்து 70 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ரெய்காட் மாவட்டத்திலேயே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர, கரையோர பகுதிகளில் சில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடல் அலைகள் 12 அடி உயரத்திற்கு உயர்ந்ததனால் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

42 வருடங்களுக்கு பின்னர் மகாராஷ்ரா மாநிலத்தில் முதன் முறையாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் கொரோனா தொற்றின் தாக்கமும் அதிக அளவில் உள்ளதனால், சுகாதார தரப்பினர் பெரும் பிரச்சனையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.