ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

Saturday, 24 July 2021 - 11:44

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+48+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%21
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் இன்று(24) கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

அத்துடன் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.