மாவட்ட ரீதியில் நேற்று பதிவான கொவிட் தொற்றாளர் விபரம்!

Saturday, 24 July 2021 - 13:15

+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 1,815 கொவிட்-19 தொற்றாளர்களுள், அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 438 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 364 பேருக்கும், களுத்துறையில் 119 பேருக்கும், கண்டியில் 69 பேருக்கும் குருநாகலையில் 26 பேருக்கும், காலியில் 85 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 57 பேருக்கும், கேகாலையில் 83 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

புத்தளத்தில் 13 பேருக்கும், அநுராதபுரத்தில் 21 பேருக்கும், மாத்தறையில் 50 பேருக்கும், பொலன்னறுவையில் 47 பேருக்கும், அம்பாறையில் 85 பேருக்கும், நுவரெலியாவில் 16 பேருக்கும், இரத்தினபுரியில் 138 பேருக்கும் தொற்று உறுதியானது.

ஹம்பாந்தோட்டையில் 14 பேருக்கும், பதுளையில் 56 பேருக்கும், மட்டக்களப்பில் 29 பேருக்கும், மொனராகலையில் 11 பேருக்கும், மாத்தளையில் 42 பேருக்கும் தொற்று உறுதியானதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Image