மலேசியாவில் நாளொன்றில் அதிகமான கொவிட் நோயாளர்கள் இன்று அடையாளம்

Saturday, 24 July 2021 - 21:02

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
கொவிட்-19 பரவல் ஆரம்பித்த காலம் முதல், மலேசியாவில் நாளொன்றில் அதிகமான நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 ஆயிரத்து 902 பேருக்கு இன்று தொற்றுறுதியானதாக மலேசிய சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்றைய நாளில் 15 ஆயிரத்து 573 பேருக்கு தொற்றுறுதியாகி இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, வியட்நாமில் இன்று 7 ஆயிரத்த 968 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

நேற்றைய நாளில், 7 ஆயிரத்து 307 பேருக்கு தொற்றுறுதியான நிலையில், இன்று அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.