காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது இம்ரான் கானின் கட்சி!

Monday, 26 July 2021 - 22:19

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
காஷ்மீரின் பாகிஸ்தான் பிராந்தியத்திய மக்கள் அவை தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

45 ஆசனங்களை கொண்ட இந்த மக்கள் அவையில், 25 ஆசனங்கள் அவரது கட்சிக்கு கிடைத்துள்ளது.

காலஞ்சென்ற பெனாசிர் பூட்டோவின் பாக்கிஸ்தான மக்கள் கட்சி 11 ஆசனங்களை பெற்ற நிலையில், முன்னாள் பிரதமர் நாவாஸ் ஷெரீபின் கட்சி 6 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

இது தவிர, தேர்தல் வாக்களிப்பு தினமான நேற்று இராவத்தினர் பயணித்த வாகனம் ஒன்று மாலைப்பாங்கான ஆற்றில் வீழ்ந்ததை அடுத்து நால்வர் கொல்லப்பட்டனர்.