ராஜமௌலி படத்தில் இணைந்தார் அனிருத்!

Tuesday, 27 July 2021 - 12:17

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%21
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி 5 மொழிகளிளும் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி காலை 11 மணிக்கு அந்தப்பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரவாணி இசையில் நட்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபல பாடகர்கள் பாடி உள்ளனர்.

அதன்படி தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர். முன்னணி பாடகர்கள் பாடி உள்ளதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.