அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது!

Thursday, 29 July 2021 - 9:15

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21
கொவிட்-19 பரவல் அதிகரிப்பால் அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் ரோசெல் போல் வலென்ஸ்கி இதனை தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செத்துவது மிகவும் விரைவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டெல்டா திரிபுடனான தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

எனவே கணிசமான மற்றும் அதிக வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் உட்பட அனைவரும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பணிப்பாளர் ரோசெல் போல் வலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொவிட்-19 வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் காவிட் தொற்றினால் 477 பேர்  உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 79, 802 பேருக்கு புதிதாக கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.