இந்திய - சீன எல்லைப் பிரச்சினை: 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று!

Saturday, 31 July 2021 - 11:08

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+-+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%3A+12%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
இந்திய - சீன எல்லைப்பிரச்சினை தொடர்பான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது

இந்த பேச்சுவாரத்தையானது சீனாவின் எல்லைப்பகுதியான மல்டோவில் இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமானது.

லடாக் எல்லையில் பாதுகாப்பு படையினரை குறைப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில், சீனப்படையினர், இந்திய எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து இருநாட்டு படையினருக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டிருந்ததுடன், அதில் 20 இந்திய இராணுவத்தினரும், பல சீனப்படையினரும் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், மோதலை தவிர்க்கும் நோக்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் 11 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.