விபத்து தொடர்பில் பிரபல பாடகி உமாரியா கைது

Saturday, 31 July 2021 - 21:54

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவங்ச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்று மாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் பாடகி உமாரியா சிங்கவங்ச பயணித்த சிற்றுந்தும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.