மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Sunday, 01 August 2021 - 8:36

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த பொது போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு காவல்துறையின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, மாகாணங்களுக்கு இடையிலான சகல பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை தனியார் பேருந்துகள் ஆரம்பிக்க முடியும் என மாகாணசபைகளுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஒழுங்கு முறையில், தொடருந்து சேவைகளும் இன்று முதல் இடம்பெறும் என தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.