பேருந்து சாரதிகள் - நடத்துநர்களுக்கான ஓர் அறிவித்தல்!

Wednesday, 04 August 2021 - 8:15

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
இன்று முதல் இருக்கைகளின் எண்ணிக்கை மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினர் இன்று முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.