விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை!

Wednesday, 04 August 2021 - 10:13

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21
இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை சிறுத்தையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 வயதான சிறுமி ஒருவரே காணாமல் போயுள்ளார்.

சம்பவ தினத்தன்று தனது மாமாவுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தாக்கி சிறுத்தையொன்று இழுத்துச் சென்றுள்ளது.

இதனைத் தொடர்நது கிராம மக்கள் மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சிறுமியின் தலை மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு முன்பு மற்றொரு 7 வயது குழந்தையையும் சிறுத்தை தாக்கிக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த பகுதி மக்களை இரவில் வீடுகளை விட்டு வௌியேற வேண்டாம் எனவும், குறிப்பாக குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் கடந்த 2 மாதங்களில் 6க்கு மேற்பட்டோர் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.