மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் பலி!

Wednesday, 04 August 2021 - 10:16

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+41+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தியொன்று அதன் எதிர்த்திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, பேருந்தில் பயணித்த 41 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 33 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.