கொவிட் பரவல் அதிகரிப்பு காரணமாக மீண்டும் நாடு முடக்கப்படுமா?

Wednesday, 04 August 2021 - 14:40

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F
தேவை ஏற்பட்டால் மாத்திரமே நாட்டை அல்லது நாட்டின் பகுதிகளை முடக்குவது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலானது தீவிரமடைந்து வருகின்றமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினிகுமாரி விஜயரட்ண கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய இராஜாங்க அமைச்சர், எந்தவொரு தீர்மானமும் தேவைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.