அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும்

Wednesday, 04 August 2021 - 14:43

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கடந்த தினங்களில் மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு, அரச பணியாளர்களுக்கு மாத்திரமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.