ஆசிரியர் - அதிபர் போராட்டம்: கைதான 44 பேருக்கும் தொற்று உறுதியாகவில்லை!

Thursday, 05 August 2021 - 6:25

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+44+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 44 பேரையும் இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் - அதிபர்கள் நேற்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு நேற்றைய தினம் ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகவில்லை என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர்களை இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.