நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த விசைப்படகு!

Thursday, 05 August 2021 - 7:14

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%21
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் தீக்கிரையாகியுள்ளது.

இதன்போது குறித்த படகில் 14 மீனவர்கள் இருந்ததாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடித்து விட்டு அவர்கள் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது படகின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறினால் அந்தப் படகு தீப்பிடித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்ததால் தீப்பரவல் வேகமாக பரவியுள்ளதுடன், குறித்த படகில் பயணித்த அனைவரும் மற்றொரு  விசைப்படகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கரைக்கு அழைத்து வரப்பட்ட குறித்த மீனவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் படகில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கடலோர பாதுகாப்பு படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் படகில் ஏற்பட்ட தீப்பரவல் காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.