திருமண நிகழ்வொன்றில் மின்னல் தாக்கி 16 பேர் பலி!

Thursday, 05 August 2021 - 7:58

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+16+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
பங்களாதேஷில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது மின்னல் தாக்கி 16 பேர் பலியாகினர்

அத்துடன், சிலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் பெய்த மழை காரணமாக 20 பேர் மரணித்தனர்.

அவர்களில் 6 ரோஹிங்யா இன மக்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டில் ஆண்டுதோறும் மின்னல் தாக்கம் காரணமாக அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகின்றன.

இதன்படி, 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 349 பேர் மின்னல் தாக்கி மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காடழிப்பு உயிரிழப்புக்களின் எண்ணிக்கைக்கு காரணம் என அந்த நாட்டு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றன.

பங்களாதேஷில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக அங்கு பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் நாட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.