இந்தோனேஷியாவில் கொவிட் தொற்றால் 640 வைத்தியர்கள் மரணம்!

Thursday, 05 August 2021 - 19:13

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+640+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் 640 வைத்தியர்கள் உயிரிழந்ததாக அந்தநாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு நிலவுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளான 640 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது.

அவர்களில் 535 பேர் ஆண் மருத்துவர்கள். 105 பேர் பெண் மருத்துவர்கள். அதேநேரம் 284 விசேட மருத்துவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.