விஜய்யுடன் இணைந்தார் செல்வராகவன்!

Saturday, 07 August 2021 - 16:24

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%21
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி ‘பீஸ்ட்’ படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளாரா அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.