'தெருக்குரல்' அறிவு புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர் பா. ரஞ்சித் ஆதங்கம்

Tuesday, 24 August 2021 - 17:30

%27%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%27+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE.+%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
'என்ஜாய் எஞ்சாமி' பாடகர் புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர் ரஞ்சித் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உலக அளவில் பிரபல்யமான பாடல், 'என்ஜாய் எஞ்சாமி. இதன் பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு.

அவரோடு இந்த பாடலில் இடம்பெற்றவர், திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள், தீ.

இந்நிலையில், சர்வதேச இசை இதழ்களில் ஒன்றான ரோலிங் ஸ்டோனின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் மற்றும் 'நீயே ஒளி' பாடலின் சாதனையை பாராட்டும் விதமாக, பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டீ போல் ஆகியோரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், இந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், என்ஜாய் எஞ்சாமி பாடலை தீ-க்கு இணையாக பாடி புகழ்பெற்ற பாடகருமான, தெருக்குரல் அறிவின் புகைப்படம் இடம்பெற்றிருக்கவில்லை.

அவரது புகைப்படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம்பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ரஞ்சித் ஏற்கனவே 'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் ஒவ்வொரு சாதனையின் போதும், பாடகி தீ (Dhee) யை மட்டுமே முன்னிறுத்துவதாகவும், தெருக்குரல் அறிவின் திறமைகள் மறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை அவரது அடையாளம் மறைக்கப்படுவதாக தன்னுடைய ஆதங்கத்தை, இயக்குநர் பா.ரஞ்சித் வெளிப்படுத்தியுள்ளார்.