ரசிகர்களுக்கு பரோட்டா சூரியின் பிறந்தநாள் விருந்து

Friday, 27 August 2021 - 16:19

%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சூரியின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரியின் புதிய தோற்றம் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் "பரோட்டா சூரி" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார்.

இதனையடுத்து, இவரக்கு அதிக படவாய்ப்பகள் கிடைக்கப்பெற்றதுடன், ரஜினிமுருகன், தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது.

அத்துடன், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட பலருடனும் சூரி நடித்துள்ளார்.

அதேபோல், தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.