9 SIIMA விருதுகளுக்கு சைக்கோ திரைப்படம் பரிந்துரை

Saturday, 28 August 2021 - 17:13

9+SIIMA+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹைதாரி ஆகியோரின் நடிப்பில் 2020 ஆண்டு வெளியான திரைப்படம் ‘சைக்கோ’.

இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020 (SIIMA 2020) விருது வழங்கல் விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் - உன்ன நெனச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நெனச்சி (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (Double Meaning Productions), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்). சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் (ராஜ்குமார் பிச்சுமணி) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சைக்கோ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 ஆவது பதிப்பு செப்டெம்பர் 18 மற்றும் 19 ஆம்திகதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.