பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உணவளித்த விஷால்

Sunday, 29 August 2021 - 16:54

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

விஷாலுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஷால் சென்னை - புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கியுள்ளார்.

மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

No description available.