வடகொரியாவின் யோங்பியோன் அணு உலை மீள ஆரம்பம்

Monday, 30 August 2021 - 15:02

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
வடகொரியா தமது யோங்பியோன் அணு உலையை மீள ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அணு நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுவாயுதங்களுக்கு பயன்படுத்தப்படும் புளுட்டோனியம் குறித்த அணு உலையின் வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக நம்பப்படுகின்றது.

சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

எனினும் செய்மதி படங்களின் உதவியுடன் வடகொரியாவில் மேற்கொள்ளப்படும் அணுவாயுதம் சார் உற்பத்திகள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

இந்தநிலையில் யோங்பியோன் அணு உலை கடந்த ஜீலை மாதத்தில் இருந்து குளிர்ச்சியான நீரை வெளியேற்றுவதாக கண்காணிப்புக்குழு அறிவித்துள்ளது.

இது புளுட்டோனியம் உற்பத்தி செய்யும் செயற்பாட்டை குறிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 மொகாவோட் உலை கொண்ட அணுவக்தி வளாகமான யோங்பியோன் வட கொரியாவின் அணு திட்டத்தின் மையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.