நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?

Monday, 30 August 2021 - 16:29

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%3F
பிரசாந்த் நடித்த ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா, சூர்யாவின் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகி ஆனார்.

அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.

தற்போது இவர் கைவசம், ‘பொன்னியின் செல்வன்’ ‘சதுரங்க வேட்டை - 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் உள்ளன.

இவற்றுள் ‘சதுரங்க வேட்டை - 2,’ ‘ராங்கி,’ ‘கர்ஜனை’ ஆகிய படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து  வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அதன்பிறகு அவர் எந்தவொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் புது படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.