அதிக வீரியம்கொண்ட C.1.2 என்ற கொவிட் திரிபு ஆறு நாடுகளில் கண்டுபிடிப்பு

Tuesday, 31 August 2021 - 13:28

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+C.1.2+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அதிக வீரியம்கொண்ட C.1.2 என்ற கொவிட் திரிபு ஆறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் வழமைக்கு மாறாக அதிக பிறழ்வுடன் வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க விஞ்ஞானிகளால் இது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய தொற்று நோய் நிறுவகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் திரிபு கொங்கோ, மொரீஷியஸ், போர்த்துக்கல், நியூஸிலாந்து மற்றும் சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.