யுவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாடல் பாடிய சிம்பு - தனுஷ்

Tuesday, 31 August 2021 - 14:08

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ட்விட்டரில் #HBDYuvanShankarRaja என்ற ஹேஷ்டெக்கும் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்கு சிறப்பு விருந்துபசார நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோர் பாடல் பாடினர்.

நடிகர் தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலை பாடகி தீ உடன் இணைந்து பாடினார்.

அதேபோல் நடிகர் சிம்பு ‘வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற லூசுப் பெண்ணே பாடலை பாடினார்.

இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.