ஆரம்பிக்கலாமா...? ‘பிக்பொஸ் 5’ முன்னோட்ட காணொளி வெளியானது

Tuesday, 31 August 2021 - 19:41

%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE...%3F++%E2%80%98%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+5%E2%80%99+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பலத்த வரவேற்பு உள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பொஸ் வெற்றியாளர்களாகியுள்ளனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும்.

எனினும், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டதால், ‘பிக்பொஸ் 4’ நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை.

அதன்பின்னர் ஒக்டோபர் தொடங்கிய ‘பிக்பொஸ் 4’ கடந்த ஜனவரி 16ஆம்திகதி வரை ‘நடைபெற்றது. கடந்த சீசனை போல பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனும் எதிர்வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், ‘பிக்பொஸ் 5’ நிகழ்ச்சிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முன்னோட்ட காணொளியை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விக்ரம் பட பாணியில் ‘ஆரம்பிக்கலாமா?...’ எனக்கூறும் அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.