பிக்பொஸ் சீசன் 5 போட்டியாளராக ஜீ.பி.முத்து?

Friday, 03 September 2021 - 14:51

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+5+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%80.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3F
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பரபலமான நிகழ்ச்சியாக 'பிக்பொஸ்' கருதப்படுகிறது.

இதுவரை ஒளிபரப்பான பிக்பொஸின் 4 சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விரைவில் பிக்பொஸ் சீசன் 5ம் தொடங்க இருக்கிறது.

இதற்கான முன்னோட்ட காணொளியை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.

இதற்குமுன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

இந்த பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், டிக்டொக் ஜி.பி.முத்து, பிக்பொஸ் வீட்டின் முன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் ஜி.பி.முத்து தான் முதல் போட்டியாளர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.