ரஷ்யாவில் 5,000 கிலோ மீற்றர் உந்துருளி பயணத்தை தொடங்கவுள்ள அஜித்!

Friday, 03 September 2021 - 17:28

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5%2C000+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%21
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வலிமை’படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அஜித் மட்டும் இன்னும் ரஷ்யாவில் தங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்காக ரஷ்யாவில் ஏற்கனவே பைக் பயணம் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டு வருவதாகவும் விரைவில் அவர் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ரஷ்யாவில் பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் ஏற்கனவே சிக்கிம் மாநிலம் வரை சுமார் 10,000 கிலோ மீட்டர் பைக்கில் பயணம் செய்திருந்தார்.

அதன் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.

No description available.No description available.