பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஷாருக்கானுடன் படப்பிடிப்புகளை தொடங்கிய அட்லீ

Friday, 03 September 2021 - 19:44

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80
‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜயை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநரானார்.

இவர் அடுத்ததாக பொலிவூட் படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

அவர் நடிக்கும் முதல் பொலிவூட் படம் இதுவாகும். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று புனேவில் தொடங்கி உள்ளது. இதில் ஷாருக்கான், நயன்தாரா கலந்துகொண்டுள்ளனர்.

இதனால் படப்பிடிப்பு தளத்துக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதிச்செலவில் அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய எக்‌ஷன் திரைப்படமாக இது தயாராகவுள்ளது.