பெரும் போகத்துக்குத் தேவையான சேதன உரத்தினை தட்டுப்பாடு இன்றி வழங்க திட்டம்

Saturday, 04 September 2021 - 21:02

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பெரும் போகத்துக்குத் தேவையான சேதன உரத்தினை தட்டுப்பாடு இன்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான விழிப்புணர்வு, தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவி உட்பட அனைத்துச் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேதன உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 02 ஹெக்டேயர் வரையில் ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்படுகின்றது.

இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் அல்லது விவசாய மத்திய நிலையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட விவசாயிகளின் தனிப்பட்ட கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதுடன், கணக்கு இல்லாத விவசாயிகளுக்கு ஒரு விசேட திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.