பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள சிறிய இரத்தினக்கல் வியாபாரிகள்

Sunday, 05 September 2021 - 8:08

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
கொவிட்-19 காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமது தரப்பினர் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக சிறிய இரத்தினக்கல் வியாபாரிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இரத்தினப்புரி மாவட்டத்தில் உள்ள இரத்தினக்கல் வியாபாரிகள் இவ்வாறு பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்கள் இதற்காக அரசாங்கத்திடம் நிவாரணங்களை எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கமைய சிறிய இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு வட்டியின்றி 25,000 ரூபா கடன் வழங்குவது பொறுத்தமானதென இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிக்கை ஒன்றினை விடுத்து அறிவித்துள்ளார்.